குறள்மொழி ஒன்பது

சாயையினாலாய பயன்னென் சாற்றுங்கால் அஃது
தீமாயை மாற்றுங் கண்.

சிமிழி லழியாப் பொருளுண் டென்றுணர்ந் தோரை
அழியாது தொழுவான் கூற்றன்.

உண்மையி னுண்மை யின்மையா முருவ
மஃது மறைந்தழிந்து விடும்.

அருவு முருவ மருவே உருவன்று
அறிவர் உருவருவும் போது.

தூண்டு விளக்கின் சுடரறிவார் ஒளிர்வர்
இருண்டிருப்பர் ஒளியறியா தோரே.

உருவருவுரும் தருணத்தி லுணர்வ ரருவே
யுருவாய் மலர்ந்தொழிந்த தென்று.

ஒழுக்க மென்ப தென்கொல் உடம்பின்
இழுக்க மொழித்து விடல்.

கொல்லாதிருமின் னுயிரை யகற்றி கொல்வர்
உடலொ ழுக்கமிலா தவர்.

உயிரிளைக்க உலகை நாடுதல் இனிதிருப்ப
இன்னா கவர்ந் தற்று.

எழுதியவர் : மதுமொழி (26-Feb-13, 6:27 am)
பார்வை : 109

மேலே