காதல் செய்யக் கற்றுக்கொள்

காதல் செய்யக் கற்றுக்கொள்
காதலர் தினத்தில் மட்டுமல்ல
வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும்
காதலியை மட்டுமல்ல
காதலையும் மனையாளையும்
பெற்றவரையும் பிள்ளைகளையும்
உற்றவரையும் நண்பரையும்
குருவையும் தெய்வத்தையும்
மற்றவரையும்

மனிதத்தையும்....

அன்பு செய்வது ஆர்வக்கோளாறல்லா
அது ஆன்மாவின் செயற்திறன்
காதல் செய்யக் கற்றுக்கொள்
காலம் காலமாகும்
வாழ்வு வசமாகும்

எழுதியவர் : மோகன் சபாபதி (27-Feb-13, 10:10 am)
பார்வை : 114

மேலே