மனிதம் இங்கு தப்பிப்பிழைக்குமா
மொட்டு ஒன்று
மலர்ந்து மணம்வீசி
காய்த்துக் கனியாகி
வாழ்வை வழமாக்குமுன்
சருகாகிப் போனது விதியா
கயமையின் சதியா
வஞ்சகத்தின் ஆளுகையா
அன்னையாய்
அருள்தரும் தெய்வமாய்
பெண்ணைப் போற்றிடும்
எம் பண்பாடு
மண்டைதீவில் மானமிழந்தது
மீண்டும் ஒரு முறை .........
மாற்றம் வருமா மனங்களில்
மனிதம் இங்கு தப்பிப்பிழைக்குமா