நெஞ்சில் இன்னும்

பனி படர்ந்த புல்வெளி
வெண்மேகம் அணைத்த
மலைமுகடுகள்
நீர் நிறைந்த பரந்த கிராமத்து ஏரி
வெண்ணிற கொக்குகள்
கூட்டமாய் பறந்து அமரும்
நாற்றங்கால் வயல்கள்
ஒற்றையடிப்பாதையில்
கால்நடைகளின் அணிவகுப்பு
தென்றல் தாலாட்டும்
தென்னை மரங்கள்
மாந்தோப்புக்குள் இசைக்கும்
இளம் குயில்கள்
அருவி கொட்டுதலின்
சாரல் துளிகள்
மாலை நேரத்து ஏரிக்கரையில்
நிழலோவியமாய்
வீடுதிரும்பும் தொழிலாளிகள்
இன்னும் எத்தனை எத்தனையோ
நெஞ்சில் இன்னும்
வரைபடமாய் எனது ....
கிராமத்து வாழ்க்கையின்
கையிருப்புகள் !
பிறரிடம் பகிர்ந்தும்
குறையாத பொக்கிஷங்களாய் !

......கா.ந.கல்யாணசுந்தரம்

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (27-Feb-13, 7:40 pm)
பார்வை : 165

மேலே