வைத்துண்ணும் உலகம்

வாழத்தான் பிறந்தார்களா - இந்த
வைத்துண்ணும் உலகத்தில்
கேட்கும் போதுதான்
விரட்டுகிறார்கள்-இந்த
வைத்துண்ணும் உலகத்தில்
அச்சோதனை இருந்தும்
உண்கிறார்கள் - இந்த
வைத்துண்ணும் உலகத்தில்
சில இரக்க உள்ளங்களினாலே..
பிறர் உண்ட உணவை
தான் உண்ணும் போது
அழுகிறான் அவன்
உள்ளக்கன்னிலே..
உணவுப்பருக்கை அவன்
நாவை முத்தமிட்ட போது
சிலிர்க்கிறான் மேனி வியர்த்து
உன்னை மறவேன்
ஒருபிடி சோற்றுக்கென்றான்
வேண்டாம் அவன் சிந்தும்
உள்ளக் கண்ணீர் - இந்த
வைத்துண்ணும் உலகிற்கு...

எழுதியவர் : D. kumar (27-Feb-13, 7:40 pm)
சேர்த்தது : Kumar Kalpana
பார்வை : 93

மேலே