வறுமை

உன்னை போல் தான் நானும்
கருவாகி உயிர்பெற்று கலியுகத்தில் பிறந்தேன்...
உன்னை போல் தான் நானும்
கண்மூடி கனவு கண்டு கண் விழித்தேன் ......
நீயோ பஞ்சுமெத்தையில் படுத்து
பளிங்குத்தரையில் இருந்து
பூ போன்ற பாதைஇலே நடந்து செல்வதாய்...
நானோ ஓலைபாயில் படுத்து
ஒட்டுகுடிசையில் இருந்து
கருவேலமுள் காட்டில் நடந்து செல்வதாய்.....
புரிந்து கொண்டேன் ..
வறுமையின் சுவடு
வலிமையானதும்
வயோதிகதிலும் மறையாது என்பதை .......