இறக்கு-மதி நீ,இரக்க-மதி நீ .......

விண்ணில் இருப்பதை போல் தன்னிகரில்லா
தானை தனிச்சிறப்பதனை

உன்னிலிருந்து இம்மண்ணும் தனித்துவமாய்
திகழ்ந்திட

இரக்கத்தின் பிறப்பிடமாய் இருக்கும் எல்லாம்
வல்ல இறைவனின்

இறையருள்மிக்க அரும்பெரும் இரக்கத்தின்
இறக்கத்தினால் தான்

பொன்னான பெண்களுள் பெரும் மதிப்புமிக்க பெண்ணான

உன் அருந்தாயின் மணிவயிற்றினில் சிலகாலம்
பெரும் தவமிருந்து

விண்ணிலிருந்து மண்ணிற்கு அரும்வரமாய் இறக்குமதியான
இறக்கு-மதி நீ,இரக்க-மதி நீ .......

வல்ல இறைவனின் வளம்நிறை இரக்கத்தின்
இறக்கத்தால் தானோ ?

உனக்கு"இரக்கமே"அருள்மிகு சிறப்பு பெயராய் இறங்கியது ..

இதயமுழுதும் மட்டுமின்றி, இம்மியளவும் கூட
இனிமை காட்டியதில்லை நீ

இருந்தும் இனியவளே உன் இனி நினைவின் கிறக்கத்தினில்
கிறங்கியவனாக

கிறுக்கிதள்ளிய கிறுக்கல்கள் தான் இக்கவிதை !!

எழுதியவர் : (28-Feb-13, 10:51 pm)
பார்வை : 107

மேலே