தாயே ! நீ எனக்கு வேண்டும் .
தாயே !உந்தன் தோள்களில்
சாய்ந்து கொள்ள உனது
தோள்கள் எனக்கு வேண்டும் .
உந்தன் மடியில் -நான்
தலைசாய்த்து உறங்க
உனது தோள்கள் எனக்கு வேண்டும் .
உந்தன் கனிவான பார்வை என்
மீது மட்டுமே பட உனது
கண்கள் எனக்கு வேண்டும் .
என்னைப் பற்றி மட்டுமே எழுதும்
உனது கைகளில் நான் கவிதையாய்
இருக்க வேண்டும் .
இப்பிறவி மட்டுமல்லாது இனிவரும்
எல்லாப் பிறவிகளுக்கும் தாயே !
நீ தான் எனக்குத் தாயாக வேண்டும்
நானே உந்தன் சேயாக வேண்டும் .