தாவணிக்கயிறு
நிலவை
பரிகாசிக்கும்
உன் புன்னகை ...
நினைவை
பரிபாலிக்கும்
உன் நேசம் ...
கனவில்
கண்விழிக்கும்
உன் சிநேகம் ...
இரவை
ஈரமாக்கும்
உன் ஸ்பரிசம் ..
எல்லாம் சேர்ந்து
கட்டிவைத்திருக்கிறது
இந்த காளையை
உன் தாவணிக்கயிறு...!!!