வெற்றிக்கான வழி
வெற்றியை
நோக்கி
பயணிக்கும்போது
எதிர்வரும்
தடைகள்,
இன்னல்கள் &
தோல்விகள்
ஒவ்வொன்றையும்
வெற்றியாகவே
கருதி
உத்வேகத்துடன்
பயணத்தைத்
தொடர்ந்திடு...
அடைய முடியாத
வெற்றியை
அடைந்து விட்டேன்
என எண்ணி,
கர்வத்தில்
ஒருபோதும்
ஓய்வெடுக்க
முயற்சிக்காதே...
அவ்வாறு
எண்ணிவிட்டால்,
அக்கணம் தான்
உண்மைத்தோல்வி
முதன்முதலாய்
உன் தோள் சேரும்....
இம்மண்ணுலகில்
எவரும்
வெற்றியை
அடைந்ததே
இல்லை...
இனிமேலும்
இல்லை...
இருப்பினும்,
வெற்றியை
நோக்கி
இறுதிவரைப்
பயணிப்பவனே
உண்மையான
வெற்றியாளன்...
ஆம்...
வெற்றி என்பது ஓர் இலக்கல்ல...
ஒரு பயணம்...