எங்கோ தொலைந்துகொண்டிருக்கிறேன்
உன் பூர்ணமுகம் தெரியுமென்று
ஜன்னல் கம்பிகளுக்கிடையில்
என்னிரு விழிகளை ஓடவிட்டேன்..
தெரிந்தது..
இலைமறைக்கனியாய் உன் மதிமுகம்!
தோன்றியது..
இனம்புரியா சந்தோசம்..
கூடவே உன் முகமும்!
என்னவென்று தெரியவில்லை.?
ம்..ம்.. புரிந்தது
நான் எங்கோ தொலைந்துகொண்டிருக்கிறேன்
எனபது மட்டும்..!
_ மகா