விளைநிலங்களை விலைநிலங்களாக மாற்றி !...

உண்டி கொடுத்து உயிர் கொடுத்தவனின் மரணம்
பாலுண்ட அங்கத்தை சிதைப்பதற்கு சமம்

நாத்து நட்டு நீர் பாய்ச்சியவனை
நல்லடக்கம் செய்யும் நரகம்(மன்னிக்கவும்) நகரம்
அறிவுடமையாக கருதப்படும் அறியாமை

வியர்வையை விதையாக்கி உழைப்பை உரமாக்கி
ஏர்பூட்டும் மண்ணின் மகன்
அவன் அல்லவே அன்னபூரணியின் அன்புமகன் !!!

சேயை கொன்று தாயை உண்டு
தன்னலம் மட்டும் வளர்கிறோம்

வறுமையில் இறக்கும் வயலரசன்
வறட்சியில் இறக்கபோகும் வரும் தலைமுறை

மரணத்தின் விளிம்பில் மருதநில தலைவன்
மாடிவீட்டு மனைகளில் மண்ணாசை மனிதன்

கடைசி பருக்கையும் உண்ட பின்பு தெரியும்
இறந்தது உழவன் அல்ல
இரை அளிக்கும் இறைவன் என்று!!!....

எழுதியவர் : கிருஷ்ண பிரியா (3-Mar-13, 5:13 pm)
பார்வை : 189

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே