காந்தி இராஜ்யம்
![](https://eluthu.com/images/loading.gif)
காந்தியின் கிராம இராஜ்யம்
காண்பதுவும் எந் நாளோ!!
" கிராமங்கள் தான் இந்தியா"
கேட்கத் தான் இனிக்கின்றது"
கிராமத்தின் உயிரோ விவசாயம்...
உயிரோ ஊசலாடு கின்றது.
.
சேறாக்கக நீர் இல்லை
சோறாக்க விற கில்லை
ஏறுகள் உடைக்கப் பட்டு
விறகு களாக எரிகின்றன
ஆறுகள் தூர்ந்து வறண்டன.
ஆளு மில்லை கிராமங்களில்
விவசாயம் இலாபம் இல்லை..
விடுத்தனர உழவுத் தொழில்.
விளை வித்த பொருளுக்கும்
விலைவைக்க உரிமை இல்லை.
விவசாய இடு பொருட்கள்
விலையேறிக் கட்ட வில்லை.
கடனாளி ஆகி விட்டார்.
கழனிகளை விற்று விட்டார்.
இன்னும் என்ன செய்திடுவார்..
இடிந்துமே முடங்கி விட்டார்.
இந்தியாவின் முது கெலும்பே
இப்பபடியும் நொறுங்க லாமோ!
வழியேதும் காணலா மோ!.......
வாடிநிற்கும் உழவ னையும்
மீட்டெடுக்க வில்லை யெனில்
மெலிந் திடாதோ பொருளாதாரம்.
இழந்த வற்றைத் தந்திட்டாலே
எழுந் திடுவான் விவசாயி.
விவசாயிகள் கூடி விற்கும்
விளை பொருள் சந்தைகளை
விரிவாக்கிப் பெருக்கி டுவீர்.
வரவு செலவுக் கணக்கிட்டு
இலாபம் பார்த்து விற்றிடுவர்
இடைத் தரகர் ஒழிந்திடுவர்.
வேளாண்மை பட்டுப் போனால்
விலைவாசி முட்ட வரும்.
வாழ வேண்டும் விவசாயம்..
வறுமை செத்துத் தொலையட்டும்..
இடு பொருட்கள் உதவினாலே
ஏற்றம் பெறும் உழவாண்மை.
பொங்கி வரும் காவேரி
தங்காமல் வரட் டுமே
மங்காமல் மின்சார மும்
எஙகுமே கிடைக் கட்டுமே.
காந்தி சொன்ன இராஜ்யம்
காணு வோம் மகிழுவோம்.
.