என் விரல்களால் அன்பு பகிர்தல்..!

இருவரையும்
அருகருகே அமரவைத்து
சுற்றிச் சுற்றி விளையாடும் மகள்
தூங்கும் போது மட்டும்
எதிரெதிராய் புறம் கிடத்தி
நடுவில்தான் படுத்திருப்பாள்...
கண் அயரும் நேரத்தில்
அவள் மேல்
சர்ப்பமாய் விரல்கள்
பின்னிக் கிடக்கையில்
இருவரின் விரல்களின்
அன்பான மகிழ்வில்
அவள் தூங்கும் முன்னே
நாங்கள் தூங்கிப்போனோம்
வெறும் விரல்களின்
அசதியில்..!

எழுதியவர் : ஆண்டன் பெனி (4-Mar-13, 7:13 pm)
பார்வை : 280

மேலே