பெண்ணை மலர் என்றவர் யார்


பெண்ணை மலர் என்றவர் யார்?
விரைந்து கூறுங்கள்..

மலர்கள்..

இதழ்கள் விரிந்தால்
அன்றே மரணம்..
தேன் சொரியும்
என் மலர்களுக்கு..!

என்னவள்..

அவள்
இதழ்கள் விரிந்தால்
ஓர் அணுகுண்டின் தாக்கம்
என் இதயத்தில்..!

இப்பொழுதேனும் கூறுங்கள்..
பெண்ணை மலர் என்றவர் யார்.?
- மகா

எழுதியவர் : மகா (20-Nov-10, 2:39 pm)
பார்வை : 485

மேலே