வீட்டுக்கொரு மரம் வளர்ப்பீர் ...!
கி.மூ கி.பி
மரணம் மரங்களாய்
வரம் பெற்றது
வானை மறைத்து
வாழ்க்கை நடத்தும்
சுவருக்கு கதவாய்
அடுப்பெரித்து
அமுதம் சுரக்கும்
நஞ்சுக்கு விறகாய்
கல்விக்கண் திறக்கும்
மண்ணின் மைந்தர்கள்
அமரும் தவமாய்
வாணிகம் செழிக்க
வறுமை ஒழிக்க
தாலாட்டும் கப்பலாய்
கண்கள் தெறித்து
கலைகள் செதுக்கும்
அழகின் பொருட்களாய்
பூக்கும் காய்கும்
பூகம்பத்தை தடுக்கும்
மாற்று மருந்தாய்
வில்லம்பும் பூட்டி
விரகல் பேசும்
வீரத்தின் சிலம்பாட்டமாய்
தவிலும் நாதமும்
மணந்த வீணையில்
இன்னிசைப் புல்லாங்குலாய்
மலைக்கு கிரிடம் சூட்டி
மாறும் காற்றுக்கு
தாகம் தீர்க்கும் மழையாய்
தூசி முதல் துரும்புவரை
வலம் வரும் காடுகள்
வறண்ட நிலமாய் நிற்கிறது
இறைவன் தந்த கலையை
இதயமுள்ள மனிதன் அழிக்கலாமா ?
மக்களே மாறுங்கள்
மரணம் நெருங்குகிறது
நாமும் அடுத்த ஜனனத்தில்
மரமாகலாம்
வேரை அறுக்காதீர்
வீட்டுக்கொரு மரம் வளர்ப்பீர் ...!