கன்னியுடல் கிழிப்பு (கற்பழிப்பு)

காமபோதை தலையுச்சி யேற
தாய், மகள், தார மென்றுணரா
வாழுமிந்த மனித கழிவுகள்
தெருநாயினும் கடை பிறப்பே…

தாயை இழிக்கும் தீசொல்லை
நியாய படுத்தும் மிருகங்கள்.
கன்னிப்பெண் காயம் திண்ணும்
பிணந் திண்ணி கழுகுகள்.

தலையேறும் காமம் தணிக்க
விலையோடு விலாசமும் பலயிருக்க
கலையான கவரி மான்களை
கடிக்கும் ஓநாய்களை சுடுகவே...

காமப்பேய் பிடித்த சாத்தான்களை
உடையுருவி அடுப்புலையினுள் நுழைத்து
அங்கஅணுக்களை சுருக்கி, கருக்கி
நடைபிணமாக்கி உயிர் வாழ விடுகவே...


வாசமிகுந்த வண்ண மலர்களை
அரும்புவிட்ட சின்ன மொட்டுக்களை
காமத்தீயால் கொழுத்தும் மனிதமலத்தை
அழிப்போரெல்லாம் முருக கடவுளாகவே….

சட்டமும் காவலும் பல ஓட்டை பானை
பால்குடிக்குமிந்த திருட்டு பூனைகளோ
பண,பதவியுடன் யதில் பாய்ந்தோட
இத (மானம்) ழிழந்த மலர் மண்ணிணுள்.



நன்றி
”வாழ்க வளமுடன்”
அன்புடன்
ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (7-Mar-13, 9:59 am)
சேர்த்தது : siva71
பார்வை : 234

மேலே