காலை பொழுது

கலவையாம் சாணநீரை
கன்னியர் கையிலேந்தி
கருத்துடன் வாயில் வந்து
காட்டுவர் மண்ணின் மேலே.
நிலவதன் ஒளியே போல
நித்தில வெண் நகையார்
சிறுத்த வெண் கோலம் தாங்கி
சீண்டுவார் விரல்களாலே

எழுதியவர் : முருகன் தில்லைநாயகம் (7-Mar-13, 9:28 am)
சேர்த்தது : அம்பை சுதர்சனன்
பார்வை : 190

மேலே