தீம்தரிகிட மழை!!!

தீம்தரிகிட தாளம் போடும் மழையே!!!
எங்கிருந்தோ வருகிறாய்!!
எங்கெங்கோ போய் சேர்கிறாய்!!!
வெள்ளை நிறத்தில் தானே இருக்கிறாய்!!!
எவ்வாறு பூமியில் பச்சை சாயத்தைப் பூசுகிறாய்????!!
மழையே!!
நீ பூமியிடம் மேகம் வாங்கிய கடனோ?!!
மேகமே!!
நீ கடனை வாங்கும்போது ரகசியமாகத்தானே வாங்கினாய்?!!
திருப்பி கொடுக்கும்போது மட்டும் எதற்கு இவ்வளவு கூச்சல்?!!
வானவில் என்ன உன் ரகசிய சினேகிதனா?!!
யாருக்கும் தெரியாமல் கூட்டி வந்து விடுகிறாய்!!!!!
ஆசையாய் அழைக்கும் பொழுது மறுத்து விடுகிறாய்!!
வேண்டாம் என ஒதுக்கும் பொழுது வந்து விடுகிறாய்!!
நீ என்ன கள்வனா விருந்தினனா?!!!
ஏழைகளின் வீட்டுற்குள் மட்டும் நுழைந்து கொள்கிறாயே!!!
நீ என்ன ஏழைகளின் விருந்தாளியா ?!!!
உழைப்பாளிகளை மட்டும் நனைக்கிறாயே?!!
நீ என்ன அவரகளது தோழனா?!!!
சென்னைவாசிகளுக்கு மட்டும் நீ எப்பொழுதும்
வேண்டா விருந்தாளி தான்!!!
உன்னை பூமியில் பூட்டி வைக்கத்தான்
மானிடப் பதர்களுக்கு மதி போதவில்லை!!!