[429] துளிப்பாக்கள் (07/03/13)
தட்டுக்கள் காலியானதும்
தராசு சமநிலைப்பட்டது..
கர்வம்
காலியானதும்
மனிதர்கள் சமநிலைப்பட்டனர் !
***
கோடரிக்குக்
கைப்பிடியாய்
இருப்பதைக் காட்டிலும்
மண்வெட்டிக்குக்
கைப்பிடியாய் இரு!
***
தோல்வி
வீட்டிற்குள் நுழைந்து
உன்னைத் தழுவிக்கொள்ளுமுன்
நம்பிக்கைக் காலை
வெளியில் ஊன்றி நட!
***
மதிய உணவை நம்பி
'டாஸ்மாக்'கில்
தண்ணீர் அருந்தப் போகாதே!
வரும் பொழுது
சாயங்காலமாகிவிடக் கூடாது!
நல்லதொரு
விடியலாக வேண்டும்!
***
முக்கொடி பறந்த
மூவரின் நாட்களில்
சிக்கலும் இதுபோல்
இருந்ததும் இல்லை -நதி
சிறைப்பட்டதுமில்லை!
***
கரிகாற் சோழன்
கட்டிய அணையில்
காவிரி பாய்ந்தது தாவி!
இன்றோ
கானல் நீர்,அதன் ஆவி!
***