விவசாயின் நிலைமை

கந்து வாங்கி
கால் கடுத்து
வெயிலில் வெந்து
கழனியை உழுது
மழைவேண்டி
மண்சோறு சாப்பிட்டு
களையெல்லாம்
கலைத்துவிட்டு
கால்வயிராய்
தினம் கிடந்து
களத்தில் சேர்த்த
நெல் மூட்டைகளை
விலை பேசினான்
வியாபாரி
முதலே கிடைக்கததால்
மூச்சைவிட்டான்
ஏழை விவசாயி

எழுதியவர் : திருக்குமரன்.வே (12-Mar-13, 4:33 pm)
சேர்த்தது : thiru
பார்வை : 202

மேலே