நினைத்துவிடு! நடந்துவிடு!! ஜெயித்துவிடு!!!

முயற்சி எடுக்கும்
எதுவும் நடக்கும்
அதனைத் தடுக்கும்
சிந்தனையை செய் அடக்கம்

உன்னைக் கடக்கும்
வாழ்வின் ஒவ்வொரு அடுக்கும்
உனக்கு விடுக்கும்
தயக்கத்தை செய் முடக்கம்

கோபத்தை வடிக்கும்
கெட்டதை முடிக்கும்
எடுத்திடும் அடிக்கும்
இதயமே துடிக்கும்

உனக்குப் பிடிக்கும்
உன் உள்ளத்தை கடிக்கும்
ஒவ்வொரு சொடுக்கும்
நினைத்ததை முடிக்கும்

தோல்வியின் அடிக்கும்
இலட்சியப் படிக்கும்
சண்டையும் நடக்கும்
சரித்திரம் படைக்கும்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Mar-13, 4:36 pm)
பார்வை : 151

மேலே