வல்லமை குறையுதோ?
வல்லமை குறையுதோ?
என்னுள் வசந்தங்கள் மறையுதோ?
புதை குழிக்குள் நுழைந்ததாய்
உள்ளம் புழுங்கி தொலையுதோ?
வறுமை சிரிக்கிதோ?
வசதியாய் சிரிக்கிதோ?
உடை வாங்கும் கடையினில்
பில்லின் எண்கள் இளிக்கிதோ?
பொருத்தம் பத்தும் கூடி குழவிட
நாயன சத்தம் மேடை பிளந்திட
இருவர் ஒருவராய் பிணைந்தோம்.
இதயம் மாற்றி சில நாள் நிறைந்தோம்.
கழுத்தும் கையும் எடை இழக்க
அடகு கடையினில் சிறை வைக்க
இரு மாதத்திற்கு அனுமதித்தாய்.
தோழி திருமணம் வரவே அடம்பிடித்தாய்.
இருவர் மூவராய் ஆன பொழுதுனில்
தேவை பெருகவே காதல் குறையுதா?
நீயும் நானும் பெற்ற குழந்தையின்
தேவை தீர்ப்பது என் கடமை புரியுதா?
விரலும் விசையும் மாறி இணைகையில்
வலிக்கும் தசைகளின் விவரம் புரியுமா?
சுமக்கும் கடமையை நீ கடந்து முடிக்க
நான் சுமந்த கடனின் அளவு தெரியுமா?
உன் தாய் என்னை சாடிய வார்த்தைகள்
குத்தி குத்தி ரணத்தைச் சீவின.
கையாளாக கணவன் என்ற ஒளி சிதறல்கள்
காதை குடைந்து எரித்தன.
வசதி வாய்ப்பினை காலம் தாழ்த்துவது
நல் உறவை கண்டிடும் நேரம் வாயக்கவே.
குறைச் சாடும் மனிதர்கள் நம்மை சூழ வருவது,
உயர் மனிதன் யாரென்று நாமும் கணிக்கவே.
புது வீட்டுப் பத்திரம் உன்னுடன் பதிவதாய்
விடியல் கனவுகள் ஓராயிரம்.
நீதிமன்ற வாசலில் பிள்ளை காண்கையில்
இன்று கண்ணீர் துளிகள் ஏழாயிரம்.
அணிகள் தமிழில் அத்தியாவசியம்.
அணிகலன்கள் வாழ்வில் அநாவசியம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
