தவறுக்கு தீர்வு தண்டனையா ?

>>>>>>>>>>>அஹிம்சை என்ற சொல்லால் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது நாட்டின் அஹிம்சா வாசிகளுக்கும் , தண்டனை மூலம்தான் தவறுகள் திருத்த படும் என்ற கொள்கைவாசிகளுக்கும் சமர்பணமாக நான் எழுதுகிறேன் ............அன்பானவர்களே பிடிவாதத்தால் ,பயத்தால் வரும் அஹிம்சையில் எனக்கும் நம்பிக்கை இல்லை தோழமைகளே ...நானும் அதனை கண்டிப்பேன் ..அதே சமயம் வெறும் தண்டனையில் மட்டும் ஒழுக்கத்தையும் நமது பலத்தையும் காட்ட முடியும் என்பது சர்வாதிகாரம் ........அதற்கு என்ன நிகழும் என்பது வரலாறு நமக்கு கற்று தந்தது அதை நாம் நினைவில் கொள்வது மிக முக்கியம் ......
.என்னுடைய நோக்கம் அல்லது சிந்தனையில் இருப்பது ஒன்றே ஒன்றுதான் சர்வ சுதந்திரம் பறவையை போன்ற சுதந்திரம் ,ஒழுக்கம் ,சமாதானம் .............இன்றைய காலகட்டத்தில் போர் நிகழ்ந்தால் நமது மனித தலைமுறைக்கே பெரிய நோய் என்பதை மறந்துவிடாதீர்கள் அன்பர்களே ஏனெனில் அவ்வளவும் மிக பெரிய சேதத்தை நிகழ்த்தும் அணு ஆயுதங்கள் ,நம் மனித பரம்பரையே தவிடுபொடி ஆக்கிவிடும் ....மனிதஇனத்தையே காவு வாங்கிவிடும் அதனால் என்ன பயன்,,,,,,, ஜப்பான் நாடு இன்னும் இதனை சந்தித்து வருகிறது "போர் ""தண்டனை"எதற்கும் தீர்வு ஆகாது இது வெறும் சிறைவாழ்வு போல்தான் "எப்போது யாரு நம்ம அழிப்பா என்ற சிறை வாழ்வு"......ஹிட்லரின் கோட்டை ஆகிவிடக்கூடாது நம் தேசம் நமது உலகமும் கூட .........சரி அப்படியென்றால் தனடனையும் தவறு ,அஹிம்சையும் தவறு ,பின் தவறுகள் நடக்காமல் இருக்க என்னதான் வழி அத சொல்லி தொலையும் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது .............
வழிகள் நிறைய உண்டு அன்பர்களே ஆனால் அதனை ஏற்றுகொள்ளும் நெஞ்சம் தான் நம்மில் பலருக்கு குறைவு .............சரி தீர்வுகள் எனும் பட்சத்தில் முதலில் நான் கல்விமுறை முற்றிலும் மாற்றபட வேண்டும் என்பேன் நம்புவீர்களா வெறும் வியாபாரமாக கல்வி நிலையங்கள் உள்ளது இதை மாற்றும் தைரியம் எவ்வளவு நபர்களிடம் உண்டு நமது அறிவு கள்ளசாராயத்தை அழிக்க நல்லசாராயம் விற்பதோடு நின்று விடுகிறது இதுதான் அஹிம்சை கற்பித்த பாடாமா அல்லது இந்தியா போதித்த போதனையா .........
தண்டனைக்கும் கல்விமுறைக்கும் என்ன சம்பந்தம் என்று ஒரு கேள்வி எழும் ?இன்றைய கல்விமுறை ஆங்கிலேயன் நம்மை அடிமையாக வைத்திருக்க கொண்டு வந்த கல்வி திட்டம் இதனால் பயன் இல்லை என்று நான் கூற மாட்டேன் அதே சமயம் அதன் பயன் காலாவதி ஆகிவிட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் ....இதனால்தான் மேலும் மேலும் கலாச்சாரம் விஷமாகி வருகிறது தயவு கூர்ந்து கவனியுங்கள் ............
அன்று உருவாக்கிய தஞ்சாவூர் பெரியகோவில் ,வடக்கே அமைந்துள்ள கஜுராகோ சிற்பம்,வள்ளுவரின்ன் குறள் ,இது போன்று ஏதாவது படைத்துள்ளோமா............
இன்றைய கல்விமுறை நமக்கு வியாபாரத்தில் செழிப்பது குறித்து போதிக்கிறது படைப்பை குறித்து அல்ல சிந்தனை குறித்து அல்ல .உண்மை இதுதான் ஓவியனை சிற்ப கலைஞனை உருவாக்க முடியாது போனது இன்றைய இந்தியாவின் துரதிஷ்டம் ...சரி அப்பம் நீங்க எத வச்சு எழுதுறீங்க கேட்டா என்னோட ஆர்வத்த வச்சு நான் தனிமுறையில் கற்று கொண்டதை வச்சு என்றுதான் கூறுவேன் சத்தியமா இந்த கல்விமுறை போதித்தது வச்சு அல்ல அல்லவே அல்ல .........
விசயத்திற்கு வருகிறேன் தவறுகள் திருத்த படவேண்டும் தண்டனைகளால் தவறுகள் பதுக்கபடும் கண்டிப்பாக திருத்த படாது .......ஒழுக்கம் தெரியாதவர்கள் ஒழுக்கத்தை பற்றி பாடம் எடுகின்றனர் அப்படி எடுத்தால் ஒழுக்கம் போதிகப்படுமா இங்கு அதுதான் நிகழ்கிறது ............கல்விமுறையின் மாற்றத்தில்தான் இனி வரும் சமுதாயம் சீர்மையும் அல்லாது கலாச்சார சீர்கேட்டில் தான் வாழும் .இதை வாசிக்கும் அன்பர்களுக்கு ஒரு கேள்வி அஹிம்சை என்றால் என்ன ?ஒழுக்கம் என்றால் என்ன ?கூறுங்கள் பார்ப்போம் ..........இன்றைய காலத்தில் அஹிம்சை கோழைகளின் செயல் என்ற ரீதியில் போகின்றது அப்படிதான் போகும் அஹிம்சை ------அதனால்தான் போர் தண்டனை என்பதை வழிமொழிகின்றனர் நானும் ஏற்கிறேன் அது தற்போதைக்கு வேண்டுமானால் தீர்வாகலாம் ஆனால் அதுவே நிரந்தரம் ஆகாது ஆகவும் கூடாது ......விரைவில் மாற்று யோசனை வேண்டும் அது மாற்று கல்விமுறையால் நிகழும் என்பது என் இந்த கட்டுரையின் நோக்கம் ....................

நன்றி

****************************************************************************
என்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (17-Mar-13, 1:32 pm)
பார்வை : 255

சிறந்த கட்டுரைகள்

மேலே