உதிரும் பூக்கள் கண்ணீர் துளிகள்

உதிர்ந்த மலருக்கு தெரியும் உயிரின் வாசம்
இழந்த செடிக்கு தெரியும் பிரிவின் வலி.
மண்ணின் மேல் செடியும் பூவும் தனி தனியே....,
மலர் விழுந்த திசை பார்த்து நிற்கிறது செடி.
மனம் கரைந்த நிலையில் மலரும் மண்ணில்.
நினைவுகள் அருகருகே இருந்தாலும்.
உதிந்த மலர் மீண்டும் சேர்வதில்லை செடியுடன்.
விதி சொல்லும் இயற்கை ஏனோ விடையாகி போகிறது இந்த கேள்விக்கு.
இருந்தும் மலரின் வாசம் செடியின் மேல்
செடியின் நேசம் மலரின் மேல் என்றும்,,,
என்றென்றும்.
இயற்கை என்பது உயிர் உள்ளவரை,,,,
இவர்களின் காதல் உலகுள்ளவரை ....
நினைவுகளால்...
குமார்ஸ்....