பேரூந்து சிரிப்புகள் ..!

பயணி : பலே ..டிரைவர் ..இந்த சனக்கூட்டத்துக்கையும் வளைச்சு வளைச்சு ..
சூப்பரா ஓட்டுறீங்க ...பலே சார் ...

டிரைவர்: சும்மா போப்பா பிரேக் பிடிக்கிதில்லை
நான் படுற பாடு ..எனக்குதான் தெரியும் ...?
*******
"இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கயாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்களே...?

நீங்க என்ன ஜோசியரா?

இல்ல,....அந்த பஸ் டிரைவர்."
******
யோவ் டிரைவர் பஸ்ஸை நிறுத்து....

ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.."

"சும்மா இருய்யா.. விசில் அடிகாம பஸ்ல நிறுத்தினா கண்டக்டர் என்னைத் திட்டுவாரு."

"யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது கண்டக்டர் தான்யா!"

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (17-Mar-13, 8:23 pm)
பார்வை : 368

மேலே