எழுத்து தள சிநேகிதர்களே....

எழுத்து தள சிநேகிதர்களே....
நற்காலை வணக்கங்கள் தோழர்களே....
கொஞ்ச காலமாய் எழுத்து தளம் எனும் இந்த தமிழ் தளத்தில் வாசிப்பினைச் செய்து வரும் எனக்கு உங்கள் அனைவரோடும் ஒருவனாக இருந்து ஒரு சுமுகமான பயணம் மேற்கொள்ள ஆசையுண்டு! இங்கு யார் மிகச் சிறந்த படைப்பாளி என்று தீர்மானிக்க முடியாவிட்டாலும் நிறைய நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்களோடு செல்லம் போகும் ஒரு சுவையான, சுவாரஸ்யமான பயணத்திற்கு அடித்தாலமிடும் ஒரு சில வரிகள் இவை ! கவிதை எழுதவும் கவிதைகளைப் படிக்கவும் உள்ள ஆர்வத்தின் வெளிப்பாடாக இருக்கும் எனது காரியங்கள் இங்கே ! உங்கள் அனைவரினதும் ஊக்கப் படுத்தல் எப்போதும் தேவை இந்த காவோலைக்கு !பெரியோ சிறியோர் என்ற பேதமின்றி முனைப்போடு செல்லும் எழுத்து தளத்தில் இருப்பது இந்த மூடனுக்கும் பெருமை தானே !என்னை உங்கள் நண்பனாய் சேர்த்துக் கொள்ளுங்கள் ! நேரம் கிடைத்தால் கவிதையும் ,நேரம் ஒதுக்கி கருத்து சொல்லவும் பிரியப் பட்டு வந்திருக்கிறேன்...இந்த எழுத்து தளத்தில் நல்ல படைப்புக்கள் எழுதுவோர் என்று நீங்கள் நினைப்போரைக் கொஞ்சம் எனக்கு அறிமுகம் செய்து விடுவீர்களா?
உதவுங்கள்!வாழ்த்துங்கள்!வாழுவோம்!

எழுதியவர் : (18-Mar-13, 8:33 am)
சேர்த்தது : கலாமன்றம்
பார்வை : 183

மேலே