வலியழி வழி எது.?..எங்கு.?..(அகன் )
எந்தக்
கண்கள்
பிரபஞ்ச முதல் பூ
இதழ் விரியக் கண்டன...?
---எந்தக் கண்ணுக்கும் புலப்படா
ஒருவனின் மரணம் இங்குண்டோ...??
எந்த
மதத்தின் போதனையில்
மானுட பகைமை ஓதப்பட்டது..?
---எந்தச் செவியும் கேட்காத
மானுட ஓலம் இங்குண்டோ..??
எந்த விரல்கள்
பூமியின்
முதல் மழலையைத் தூக்கிட
குவிந்தன...?
---எந்தக் கைகளும் தொடாத
வறுமை பீடித்த மழலைகள் l
இங்குண்டோ..?
எந்த
விசையின் திசையில்
பூமி
முதல் சுற்று தொடங்கியது...?
---எந்தத் திசையிலும் வாழ்விடமற்ற
மக்கள் நிறை நிலம்
இங்குண்டோ...??
உண்டெனில் ,
வா...எல்லாவற்றையும் எரிப்போம்..
மானுட அடையாளம் அழிப்போம்..
மண்ணாகிப் போவோம்...
-ஏற்கனவே மறைக்கப் பட்டவர்களோடு...!!
வாழ விருப்பமா...?
சரி
வா
அவன்...அவள்...அவர்கள்...
வலியழி வழி காண
விழி விரி...கரம் இணை...
அவர்களோடு வாழ்வோம்.
அன்றியும்
அவர்களோடு வீழ்வோம்.....!!
எந்தக்
கண்கள்
பிரபஞ்ச முதல் பூ
இதழ் விரியக் கண்டன...?
எந்த
மதத்தின் போதனையில்
மானுட பகைமை ஓதப்பட்டது..?
எந்த விரல்கள்
பூமியின்
முதல் மழலையைத் தூக்கிட
குவிந்தன...?