நினைவுகளின் நிழல்
உன்னை மறக்க முடியாமல்
நான் அழுத நேரங்கள்
என் கண்ணீர்த் துளிகள் கன்னங்களை வருடி,
கீழே வழிந்தன....
அப்போதும் நீ உன் விரல்களால்
என் கன்னத்தை வருடிய பொழுதுகளே
என் நினைவில் தோன்றின...
வறண்ட என் உதட்டை நாவால் நனைத்தேன்...
நீ உன் உதடுகளை
எனக்கென கொடுத்த நிமிடங்களே
கண் முன் தெரிந்தன...
என் தாயின் அணைப்பிலும்
உன் ஸ்பரிசத்தையே உணர்ந்தேன்..
நெற்றியில் ஆடிய முடியை ஒதுக்கினேன்..
என் கூந்தலை நீ
கோதிய சுகத்தையே நான் உணர்ந்தேன்..
பலர் கூறினர்
உன்னை மறக்கும்படி..
என் இதயத்தில் நீ இருக்கிறாய் என்று
அதைப் பிடுங்கி வெளியே எறிந்தேன்...
இதயத்தில் மட்டுமா நீ இருக்கிறாய்???
இதயத்தின் துடிப்பால்
என்னுள்ளே ஓடிய உதிரமும்
உனக்கு தானே சொந்தம்??
அதையும் வற்றும்படி செய்தேன்..
என் உடலிலும் உன்
கை ரேகையைக் கண்டேன்..
அதையும் எரித்தேன்..
எனினும்,
என் ஆவியிலும் உன் சுவாசம் உள்ளது..
என் மடமையைக் கண்டு
அது எள்ளி நகையாடியது..
என் ஆன்மாவில் உள்ள 'ஆண்' நீதான் என்று..
ஆன்மாவிற்கு அழிவில்லை என்பர்..
என்னுள்ளே இருக்கும் உனக்கும் தான்...