முதல் காதல்...

கதிரவனைப் பார்த்ததும் கண் விழிக்கும் புதுமலராய்
இதயம் பூத்துக்குளிங்கியது
என் கருவிழியில் நீ விழுந்த அந்த முதல் நிமிடம்...
கோடி கோடி விண்மீன்களின் இடையே
கொடியேற்றும் வெண்ணிலவாய்
கூடி நின்ற உறவுகளுக்கு மத்தியில்
உன் புது உறவு...
பார்வையால் பேசுகிறாய்
பகலிரவு தெரியாமல் பேதலிக்கிறேன்
நீ என்னைத் தாண்டிச் செல்லும்போது
உன்னோடு நீங்கிச் செல்கிறது என் இதயமும்..
முதல் காதலே..!
என்று நுழைந்தாய் என் இதய வாசலில்
இன்று முழுவதும் ஆக்கிரமித்துவிட்டாயே.....