பூத்திட்ட புதுமலர்

பூமியில் பூத்திட்ட புதுமலராய்
புன்னகை சிந்திடும் இளந்தளிர்
பார்வையே சொல்லிடும் பலபல !

ஏக்கங்கள் ஏராளம் நெஞ்சினில்
வழிந்திடும் கனவுகள் விழிகளில்
ஓவியமே உணர்த்திடும் உலகிற்கு !

நிகழ்காலம் நினைவில் ஓடுதா
எதிர்காலம் நெஞ்சில் வருதா
மாற்றங்கள் மனதை வருடுதா !

புன்னகை என்றும் நிலைக்கட்டும்
வளமோடு நலமுடன் வாழட்டும்
நினைப்பவை யாவும் நடக்கட்டும் !

பூமியெனும் தோட்டத்தில் பூக்கள்பல
பூரிப்புடன் பொங்கிடும் இன்பமுடன்
வாழ்வாங்கு வாழிய வாழ்த்துக்கள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Mar-13, 8:29 am)
பார்வை : 88

மேலே