கற்சிலை கடவுளின் படைப்புகள்...
*
கருவறையில் சுமந்தபின்
வீசியெறியப்படும் குழந்தைகளை
ஓரிரு நாட்கள் சுமக்கும்
தாய்மடியாய் குப்பைத்தொட்டிகள்...
கருவறையில் குழந்தைகளை
சுமக்கமுடியாத மலடிகள்...
*
உலகை காண முடியாத குருடர்கள்....
காதிருந்தும் கேட்கமுடியாத செவிடர்கள்...
வாயிருந்தும் பேசமுடியாத ஊமைகள்...
கண்,காது,வாய்,கைகள்,கால்கள்,
உடல் உறுப்புகள் இருந்தும்
செயலாற்ற முடியாததால்
மனம் வளர்ச்சி குன்றிய குழந்தைகள்....
*
வரதட்சணை கொடுக்கமுடியாமல் முதிர்கன்னிகள்...
பெற்ற பிள்ளைகள் இருந்தும்
கூட்டம்,கூட்டமாய் குவியும்
முதியோர் இல்லங்கள்..
*
சாலையில் உணவோடு,
மலம் சேர்த்து கழிக்கும்
பாட்டாளி மக்கள்....
மாதச்சம்பளம் மிஞ்சிய
இலஞ்சம் என்ற பெயரில்
வருமானத்திற்குமேல்
வருமானம் சேர்க்கும்
பணக்காரர்கள்.......
*
மண்ணில் பிறந்தது இவர்களின் தவறா?
இப்படியோர் பிறப்பு...
எற்றத்,தாழ்வுகளை அமைத்து படைத்தது
பிரம்மனின் தவறா?
*
நீ இருக்கிறாயா?
இறந்துபோன
கற்சிலையாய் கிடக்கிறாயா?
*
உண்மைதான்..
கோயிலின் கருவறையில்
கடவுள் கற்சிலைகள் என்பார்கள்...
என்றுமே கற்சிலைகள்தான் கடவுள்
என்பதை உணர்த்தியது....
இப்படியொரு பிறப்பு...
ஏற்ற,தாழ்வு மிகுந்த
கற்சிலை கடவுளின் படைப்புகள்...
*