கனவோடு முறியும் காதல்
நான் தயங்கி கைபிடிக்க
நீ மயங்கி மெய்துடிக்க
நாணத்தில் சிவக்குது உன் முகம்
நாணலாய் தவிக்குது என்னகம்
வலக்கரம் உன் குழல் கோதிவிட
வளைக்கரம் என் கழல் மோதிவிட
வெட்கமாய் செல்லமாய் நீ மறுக்க
நுட்பமாய் கள்ளமாய் நான் இறுக்க
நாளிதழின் பின்னாடி மறைப்பினிலே
நாலிதழும் கண்மூடி விறைப்பினிலே
சட்டென ஆறுமணி அலாரம் அலற
பட்டென அத்தனையும் தூரமாய் மறைய
தூக்கத்தின்பொழுது விழித்தேன்
ஏக்கத்தில் அழுது திழைத்தேன்
தலையணை அறியும் என் சாதல்
கனவோடு முறியும் என் காதல்