எங்கே மனித உரிமை.........!

அவர்களின் அரை மணிநேர சுகத்திற்காக இக்குழைந்தைக்கு ஏன் அனாதை எனும்
புனைப்பெயர்

கடவுளாக கருதப்படும் குழைந்தகளின் கோவில் இன்றென்னவோ குப்பைத்தொட்டியாகத்தான்
இருக்கிறது

பிறப்பு என்றால் என்ன என்பதை தெரியும் முன்னரே இறப்பை நோக்கி செல்கிறது
குழைந்தை- கள்ள உறவின் காரணமாக........

பெண்மையை போற்றும் இதே நாட்டில் தான் பிஞ்சு குழந்தை பெண் என்ற காரணத்தினால்
கல்லறை நோக்கி நகர்த்தபடுகிறது

எது எப்படி இருந்தாலும் சரி -இனி தயவு செய்து குற்றம் அறியாத பிஞ்சுகளுக்கு
மரண தீர்ப்பு வேண்டாம்

தவறு செய்த மனிதனுக்கு கூட மரண தண்டனை வேண்டாம் என குரல் குடுக்க இருக்கிறது
மனித உரிமை ஆணையம்

தவறென்றால் என என்றே தெரியாத இக்குழைந்தைகளுக்கான மரணத்தை தடுக்க எங்கே மனித
உரிமை........

எழுதியவர் : VIKKI (22-Mar-13, 2:29 pm)
சேர்த்தது : VIGNESHWARANEC
பார்வை : 152

மேலே