மரணமெனும் விடியல்

என்
ஆயுளின்
அதிக காலங்கள்
உன் வீட்டு
அடுக்களையிலே
அறையப்பட்டு விட்டது

உனக்கு
நிஜங்களை விட
நிழல்களும்
தர்மத்தை விட
தர்க்கமும்
அதிகம் பழக்கப்பட்டதாயும்
விருப்பப்பட்டதாயும் விட்டது

அதனாலோ என்னவோ
என்னை நீ
அதிகம்
புறக்கணிப்பதை
புழக்கத்தில் கொண்டுள்ளாய்

சித்தரவதைகள் என்றால்
அது உனக்கு
என்னில் வரையும்
சித்திரங்கள்
என்றாகி விட்டது

என்னுடல் உன் பார்வையில்
ஒரு காகிதமாய்
ரணங்களை எல்லாம்
தூரிகையாய் தீட்டி
வேதனைஎனும் வர்ணம் கொண்டு
நிதமும் என்னில்
ஒரு வகை சித்திரம்
கிறுக்கத்தான் செய்கிறாய்

உன்னைப்போன்ற
கலைஞ்சனுக்கு - என்று ஒய்வு
என எண்ணியே
என் காத்திருப்புக்கள்
நீள்கின்றன

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாய் - எங்கனம்
யூகிப்பாயோ தெரியவில்லை
புதிது புதிதாய்
வேதனைகளை
புரிய வைக்கிறாய் - என்
புலங்களில் ஒன்றை கூட விடாமல்


ஒவ்வொரு நாளும் விடிகிறது - பின்
இருள்கிறது
என் வாழ்க்கையில் மட்டும்
ஒழி ஏற்றாது

ஊரில் எத்தனையோ சாவுகள்
அனுதினம் கேட்டுக் கேட்டு
சலித்துப்போய் விட்டது
எனக்கின்னும் ஏன் வரவில்லை

இனி இறப்பு ஒன்றுதான்
விடியல் தரும்
விடுதலை ....

எழுதியவர் : ரொசானா ஜிப்ரி (22-Mar-13, 2:10 pm)
பார்வை : 185

மேலே