கவிதை ஏப்பம்...
கற்பனை ஏக்கத்தை
உணவாய் உண்டு
கவிதை ஏப்பத்தை
தினம் நான் கண்டு
வாழ்க்கை ஏட்டினைப் படித்தேன்
நாளும் பூக்களாய் சிரித்தேன்
எழுத்தெனும் நீரினில்
நாளும் குளித்து
வார்த்தை ஆற்றினில்
குதியாய் குதித்து
ஆடுவோம் வாருங்களேன்
என் அருமை தோழமையே..!!