...........நெஞ்சத்தில்..........
எது நடந்தாலும் எதை இழந்தாலும்,
நீயே என் நெஞ்சுக்குழியடைக்கும் விக்கல் !
நியதிகளைத்தாண்டி உனை நீங்கிச்செல்ல நினைக்கின்,
உன் நினைவே வந்து அடைக்கும் நெஞ்சை !
நஞ்சு கலக்காத பிஞ்சுநிலவாக்கி,
எனை கொஞ்சிடும் சகியன்றோ நீ !!