.............உனக்கும் பொருந்தும் ...........
மூச்சிரைக்க ஓடிவந்தவனுக்கு ,
போக்குக்காட்டியே போய்க்கொண்டிருந்தது நிலா !
நின்று மூச்சுவிட்டேன் !
அதுவும் அந்தரத்தில் நின்று பனியாய் அணைத்தது !
விடியும்வரை ஓடுவேன் !!
பிறகு எனை பிரிந்துதானே போகும் அது !
என்ற யோசனையே இல்லாமல்,
முண்டியடித்து ஓடுகிறது மீண்டும் கால்களும் கவனமும் !!