ஓம்கார நாதனு ....மெட்டு

ஓம்.....ஓம்.....

ஓம் மாதா உன்னையே..
துதிப்பாட வந்தேனே....நான்.........
பாமலர் தன்னிலே.....(2)

சந்ததம் உனைப் பாடியே......
வந்தனைக் கூறிடுவேன்.....
சிந்தையில்.... நீயிருந்தே.... காத்தருள்.... செய்திடு ..
அன்னையே...... அனுதினமும்....(2)

(ஓம்)....

நாரத கானம்.........ஆ.........ஆ.........ஆ..........
நாரத...கானம்....மீட்டியே.....நாளும்.....
நாயகி உன்புகழ் போற்றி நிற்ப்பேன்.....

நான்மறை... பொருள்கள்...யாவுமாய்....திகழும்....
நலமிகும் தெய்வமே...உன்னை நான்......

எழில்மிகும் என் அன்னையே.....
எளியோர்கள் துணை நீயம்மா......
என்றுமே....உன்னருள்....தன்னையே....நாடினேன்.....
என்றென்றும்....அருள் செய்யம்மா.....(2)
(ஓம்)

அன்பான அன்னையே... அறம்பல....செய்திடும்.....
அருள்மிகும் ஜோதி நீயே......(2)
அங்கு இங்கு என.....
எங்கும் பிரகாசிக்கும்.....
எழில்மேவும்.... தெய்வம் நீயே........

தியாக தீப....மய ஜோதியே......
நாங்கள் வாழ..... நலம் பேணினாய்....
என்றும்...எங்கள்...இதயமலரில் இருந்து....
காவல் தெய்வமாய் விளங்கும்.....
அன்னையே....வந்தருள்....(2)
(ஓம்)

எழுதியவர் : திருமதி G .S விஜயலட்சுமி (24-Mar-13, 7:55 pm)
பார்வை : 81

மேலே