வீரனின் உயிரால் நாடு வாழ்கிறது!

எண்ணிப் பார்க்கிறேன்!

அமைதியான தேசத்தை
குட்டிச் சுவராக்கிய
ஏகபோக அரசியல் சாக்கடைகளை
எண்ணிப் பார்க்கிறேன்!

லஞ்சப் பிசாசின் பிடியில் சிக்கி
பஞ்சத்தில் வாடுவோரை
வஞ்சிக்கும் மந்த புத்தியுள்ளோரை
எண்ணிப் பார்க்கிறேன்!

காசில்லாதோரை பிழிந்தெடுத்து
வஞ்சிமாதரை இம்சித்து
பிஞ்சுள்ளங்களை பாடுபடுத்தி
அதனால் வயிறு புடைத்து வாழும்
அயோக்கியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு
துவண்டு போன
இத்தேசத்தின் நிலையை
எண்ணிப் பார்க்கிறேன்!

ஐயோ!
இவர்களுக்காகவா
நான் உயிர் கொடுக்கிறேன்!

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசி வாழும்
கோழைகளுக்காகவா
நான் உயிர் கொடுக்கிறேன்!

எண்ணிப் பார்க்கிறேன்!
எனது உடல் வேகுமோ!

ஆனாலும்
நேர்மையுடையோர்
கொஞ்சம் பேருக்காக
எனது ஆன்மாவைத் தருவதில்
திருப்தியடைகிறேன்!

எண்ணிப்பார்க்கிறேன்!
என் முன்னே
உயிர்விட்ட தோழர்களின்
மனப் பாட்டினை
எண்ணிப் பார்க்கிறேன்!

இப்போது
எனதுயிர் போகவுள்ள
மணித்துளிகளை
எண்ணிப் பார்க்கிறேன்!

ஜெய் ஹிந்த்!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Mar-13, 10:29 am)
பார்வை : 105

மேலே