விளக்கின் அடியில் இருட்டு
விளக்கின் அடியிலும்
இருட்டு உண்டு ..!!
அது போல
உலகிற்க்கு
உன்னத
உரைகள் பல
உரைப்போர்
உள்ளத்திலும்
ஊனம் உண்டு..!!
உலகிற்கு
உண்மை உரைப்போர்
உணர்ந்து அதை
உள்ளத்திலும்
உடன் இருத்தி
உதாரணமாய்
உருமாறி ...
விளக்கெனவே
வாழ்ந்து
தனக்குள்ளும்
விடியல் கண்டு...
அடி மனம் கொண்ட
இருள் அகற்றி
அன்பு அமைதி
இவை பரப்பி...
அறியாமை
அகற்றிடுக!!
அற நெறி வாழ்ந்தே
அது பற்றி
விளக்கிடுக!!