காலை வாரலாமா?

காலை வாருவது மனிதனுக்கு
கை வந்த கலை!

கையை கொடுப்பது போல
கொடுத்துவிட்டு
இழுத்துவிட்டு விடுவார்கள்!

தோளை தட்டுவது போல
தட்டிக் கொடுத்து
எட்டி உதைத்து விடுவார்கள்!

காலை வாருவதில்
அப்படி என்ன ஆனந்தமோ?

நேற்றைய சொந்தம் சில சமயம் காலை வாரும்
நெருங்கிய சொந்தமும் காலை வாரும்

தெரிந்த மனிதனும் காலை வாருவான்!
தெரியாத மனிதனும் சிலசமயம் காலை வாருவான்!

காலை வாருவதில் ஆண் பெண் என்று
வேறுபாடில்லை!

வயது வித்தியாசம் ஏதுமில்லை!

சாதி மத பேதமில்லை!

எல்லோருக்கும் பொதுவானது
இந்த காலை வாரும் விளையாட்டு!

ஒன்று மட்டும்
அவர்களுக்கு நான் சொல்ல ஆசைப்படுகிறேன்!

நீங்கள்
காலை வாருவதற்கு முன்
தயவுசெய்து
உங்கள் காலை
யாரும் வாராமல் பார்த்துக்கொள்ளவும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Mar-13, 1:03 am)
பார்வை : 139

மேலே