நேற்றைய பொழுதின் கடைசி வரிகள்....
நொடி ஒன்றில் கண்ட முகம்
காற்றில் தேட நினைத்தும்
மறந்த நினைவில்
மீண்டும் மீண்டும் நடக்கிறது....
தடதடக்கும் வேளையில்
உறங்காமல் காத்திருக்கும்
விழிகளின் மீது நிச்சயமாய்
விழுந்து விட துடிப்பது எதுவென்று
தெரியாமல் தவிப்பது
நானும் எனது கனாக்களும்....
உரிய காலம் வந்தும்
உதவாமல் போனது படித்த
புத்தகமும் கேட்ட அறிவும்....
விடை தேடி வினாவும் தேடி
அலைகையில் சூழ்நிலையின்
கைதியாக குருகும் மனதின்
பாதை பெரும்பாலும் எனதில்லை....
நான் போகும் மழை நாட்களின்
சாரல் கொண்டு நடுங்கும்
காட்சிகளை நினைவு கூர்கிறேன்...
உரசாமல் தீரும் வத்திகுச்சியாய்
உருகும் உயிரின் மீது
கொண்ட காதலை அர்த்தப்படுத்தின...
நேற்றைய பொழுதின் கடைசி வரிகள்....
இது போதும் என்றோ வேண்டும் என்றோ
தோன்றாமல் என்னிடம் மயங்கும்
காதலை நான் ஏற்றுக்கொள்கிறேன்...
பல நியாயங்களை கொன்று...
பசிக்கும் என்று தெரிந்துதான்
மீண்டும் மீண்டும் செரிக்கிறது
வயிறும் வாழ்வும்...
மீண்டும் செரித்து மீண்டும் புரிந்து
கொள்ள ஒரு வாழ்க்கை போதாது....