ஊட்டசத்து
ஊட்டசத்து ஊட்டசத்து
எங்கு உள்ளது ஊட்டசத்து
ஐந்து நட்சத்திர ஓட்டலிலா,
பழமுதிர் சோலை பழங்களிலா
சூர்யா க்ரீன் காய்கரிகளிலா
நட்சத்திர ஓட்டல்களின் பழரசங்களிலா
சிந்தியுங்கள் ஆரோக்கிய சிந்தனையை
ஆரோக்கிய உணவை எங்கும் தேடவேண்டாம்
மலிந்து கிடக்கிறது உன் வாயிற்படியிலே
புரத சத்து கிடைத்திடுமே
பால் முட்டை பருப்பு வகை தனை புசித்திட்டால்
இரும்பு சத்து மலிந்து கிடைகிறது
கீரை வகைகளிலே
தள்ளு வண்டியிலே வருகிறது
புத்தம் புதிய நாட்டுப்புற காய்கறிகள்
ஏன் உண்ன வேண்டும் ஐஸ் பெட்டி காயதனை
நல்ல தண்ணீர் பானையில் உள்ள போது
பிளாஸ்டிக் புட்டியில் அடைத்த தண்ணீர் எதற்கு
காரில் பறக்காமல் காலில் ஓடிட்டாள்
கொழுப்பு தானாய் கரைந்திடுமே
சூரியனை பகவானாய் கொண்ட நாம்
வீட்டின் உள்ளே விடுவதில்லை
வைட்டமின் D ஐ பெறுவதில்லை
எலும்பை பலபடுத்த மருந்து வேண்டாம்
கதிரவன் காத்திருக்கிறான் தருவதற்கு
இயற்கையே நேசியுங்கள்
இயற்கையே சுவாசியுங்கள்
இயற்கையோடு வாழுங்கள்