செய்தியும் சிந்தனையும் கவிஞர் இரா .இரவி !

செய்தியும் சிந்தனையும் கவிஞர் இரா .இரவி !

வரலாற்று சிறப்பு மிக்க தமிழக சட்டமன்ற தீர்மானத்தை ஏற்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஷ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார் .தீர்மானம் நிறைவேறி விட்டது .இலங்கை இராண்டாகக் கூடாதாம் .ஒன்றாகவே இருக்க வேண்டுமாம் .பாடிய பல்லவியே பாடி உள்ளார் .ஒரு வேளை ராஜபட்சே உலக நெருக்கடிக்கு பயந்து இரண்டாக சம்மதித்தாலும் இவர்கள் சம்மதிக்க மாட்ட்டார்கள் போலும் .காரணம் என்ன ? இலங்கையில் கம்யூனிஷ்ட் கட்சி என்ற பெயரில் நாலு சிங்கள நாய்கள் உள்ளது .அவர்களை பகைத்துக் கொள்ள கூடாதாம் .அந்த சிங்கள் நாய்களா உங்களுக்கு தமிழகத்தில் வாக்களிக்கப் போகிறார்கள் .சிந்திக்க வேண்டாமா ? மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டாமா ? தமிழக மக்கள் காங்கிரசை வெறுத்ததுப் போல உங்களையும் வெறுக்கும் படி பேசாதீர்கள் இலங்கையில் இனி தமிழரும் சிங்களரும் சேர்ந்து வாழ முடியாது .எலியும் பூனையும் எப்படி சேர்ந்து வாழ முடியும் .சிந்திக்க வேண்டும் .தெற்கு சூடான் போல தமிழ் ஈழம் உருவானால் உங்களுக்கு என்ன நஷ்டம் ?

கூடங்குளம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மக்களுக்கு ஆதரவு தராமல் ,ரசியாவில் உள்ள கம்யூனிஷ்ட்களை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக மக்களை பகைத்துக் கொள்வது நியாயமா ?தமிழக தேர்தலில் உங்களுக்கு ரசியவினரா வாக்களிக்கப் போகிறார்கள் .தமிழக மக்கள்தானே வாக்களிக்க வேண்டும் .மக்கள் போராட்டத்தில் கம்யூனிஷ்ட் கலந்து கொள்ளாததால் ,ஆதரவு தராதது கம்யூனிஷ்ட் கட்சி மக்களிடமிருந்து நன் மதிப்பை இழந்து வருகிறது .சிந்தித்துப் பார்த்து பல்லவியை மாற்றுங்கள் .

.முத்தையா முரளிதரன் "நான் தமிழன் "என்று சொல்லி உள்ளார் .அவர் தமிழர் அல்ல தமிழா விரோதியின் நண்பர் .இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்களாம் .பச்சைப்
பொய் பேசி உள்ளார் முத்தையா முரளிதரன் .இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்ந்தால் நேற்றுக் கூட ஏன் 97 இலங்கையில் தமிழர்கள் குடும்பத்துடன் ஆஷ்திரேலியா செல்ல முயன்ற பொது சிங்களப் படை கைது செய்து உள்ளது .இலங்கையில் குழந்தைகள் முதியோர் ,பெண்கள் பாராமல் மருத்துவமனை மீது குண்டுகள் வீசி கொலை செய்த கொடூரனை கண்டிக்காமல் நல்லவன் என்று சொல்ல முத்தையா முரளிதரன் நாக்கு கூச வில்லை .முத்தையா முரளிதரன் சுகமாக வாழ்ந்தால் போதுமா? .மற்ற தமிழர்களின் நிலை என்ன ? நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர் இன்று சிங்கள இனவெறி கொள்கை பரப்பு செயலார்ளர் ஆகி உள்ளார் .ராஜபட்சே போட்ட எலும்புத் துண்டுக்கு வாலாட்டி உள்ளார் .முத்தையா முரளிதரனுக்கு வேண்டுகோள் இனி எங்கும் தயவு செய்து நான் தமிழன் என்று சொல்ல வேண்டாம் .தமிழ் இனத்திற்கு இழுக்கு .!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் ரண துங்கா திமிர் நேர்முகம் !தமிழகத்தில் தடை விதிக்கப் பட்ட காரணத்தால் ,அனைத்து அய் .பி .எல் .போட்டிகளிலும் இலங்கை அணி கலந்துக் கொள்ளக் கூடாது .என்று தெரிவித்து உள்ளார் .இலங்கை அணி ஆடவில்லை என்று வருந்தப் போவது இல்லை நாங்கள் ..விட்டது சனி !.இதை இதை தான் எதிர்பார்த்தோம் .நடந்து விட்டது .உலக அளவில் இலங்கையின் முகத்தில் கரி பூசப்பட்டது .சிங்களர்க்கு சும்மா அதிருதில .விளையாடக் கூடாது என்பதற்கே அதிருதில லட்சக் கணக்கில் தமிழ் இனத்தை சிங்கள இன வெறிக்கு பறி கொடுத்த எங்களுக்கு எவ்வளவு அதிரும் .!

--

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (28-Mar-13, 9:10 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 88

சிறந்த கட்டுரைகள்

மேலே