மதத்தை ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்?..........

இன்று வேகமாகப் பரவி வரும் ஒன்றாக இருக்கிறது பேஸ்புக்கில் மதக்கொள்கையை பரப்பிவருகின்றனர். மதங்கள் மத வெறியைத் தூண்டுவதற்கும் அல்ல மக்களைக் கெடுக்கவும் அல்ல. எம் மதமும் கூறுவது சாந்தி,சமாதானம், நல்வழி என்று மக்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்களையே கூறுகின்றது.

எம்மதமும் சம்மதமே எல்லா மதங்களும் நல்வழிப்படுத்தும் கருத்துக்களைக் கூறுகிறது. ஆனால் எமக்குள்ளே மதவெறி ஊறிக்கிடக்கின்றது. நாம் ஒன்றை மட்டும் உணர வேண்டும் நாம் எவரும் மதங்களைக் கற்று அதில் எம்மதம் சரி அல்லது தவறு என உணர்ந்து மதங்களை பின்பற்றுபவர்கள் அல்ல. எம் மூதாதை எம்மதத்தை பின்பற்றினார்களோ அம் மதத்தைப் பின்பற்றும் 6ம் அறிவு அற்ற நாம் மதம் பற்றி கதைப்பதற்கு அருகதையற்றவர்கள் என்பதை உணர வேண்டும் முதலில்.


நான் ஒரு நாத்திகன் அல்ல ஆனால் கடவுள் என்ற ஒருவன் இல்லா விட்டால் எம் குறைகளைக் கூறி யாரிடம் முறைப்படலாம்? எங்கே எம் மனச்சுமையை இறக்கி வைப்பது? எமது உள்ளத்துக் குமுறல்களைத் தாங்கும் சுமை தாங்கி யார்? சற்று சிந்தித்தால் உணரமுடியும்.
அனைவருக்கும் இறைவன் ஒருவனே........ ஆனால் நாம் பிரித்துக்கொண்ட மதங்களே இவை. இவற்றில் அறைகுறையாய் கற்றுக்கொண்டு கத்தித் திரிவதில் எந்தப்பயனும் இல்லை.

மதங்களைத் தாண்டி இன்னும் ஒன்றை நாம் உணர வேண்டும் அது மனிதாபிமானம் எனும் மனித நேயம். அம் மனித நேயம் மதத்தை மதமாக மதித்து மற்றைய மதத்திற்கு மதிப்பளிப்பவனிடமே எதிர்பார்க்கலாம். அவ்வாறு மதிப்பளிப்பவன் எங்கே?
மதங்கள் எங்கே?]
புரியவில்லை.............
அர்ப்பத்தணமான உலகமும் அர்பணிப்பு இல்லாத மதங்களும் எங்கே தூய்மையாக முடியும்?


மதங்கள் என்றும் தூய்மையானவையே. அதை தனது வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டு மாறாட்டம் செய்யும் மனிதர்களே மதங்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். மதங்கள் மதங்களாகவே இருக்கின்றது மனிதனே மாற்றத்தை ஏற்படுத்திக் கொச்சைப்படுத்திகின்றான்.

வாய்மை என்றும் வெல்லும்.......உண்மை மார்க்கம் என்றும் நிலைக்கும்...

எழுதியவர் : பிரோஸ் (28-Mar-13, 8:51 pm)
சேர்த்தது : mohamed firos
பார்வை : 133

சிறந்த கட்டுரைகள்

மேலே