கல்லூரி நட்பு !!
மூன்று வருடங்கள்
முன்னூறு வருடம் போல்
கூடி வாழ்ந்திருந்தோம் - நட்பெனும்
கூட்டில் நாம் பிறந்தோம் !!
அருகினில் அமர்ந்து
அன்பினில் கலந்து
நட்பினை பரிசளிப்போம் - நாம்
அடிக்கடி நமை மறப்போம் !!
உலகினை கடந்து
நிலவினை குடைந்து
நமக்கென இடம் செய்வோம் -அதற்கு
நட்பென பெயரிடுவோம் !!
நேசம் பொழிந்து
வேஷம் அழிந்து
தேசத்தை ஒன்றிணைப்போம் -ஜாதி
மத பேதத்தை நாம் ஒழிப்போம் !!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
