என்னை மாற்றிய ஈழம்!

அன்னை வயிற்றில் கருவானது முதல்
நான் பிறந்து வளர்ந்தது வரை
என்னை வளர்த்தது என் ஈழம்

துப்பாக்கி தூக்கி சுடுமணலில்
தவண்டு போராடு என்று நான் கூறவில்லை
தப்பாமல் உன் குரல்களால்
உரக்கக் கதரிடு
"எனது ஈழம் எமக்கு வேண்டும்" என்று

ஓடி விளையாடு என் கால்தனை
ஊனமாக்கியது சிங்களம்
மஞ்சலிட்ட என் கைதனை
முடக்கியது சிங்களம்
பட்டாம் பூச்சிபோல் பறந்து திரிந்த என் கண்தனை
குருடாக்கியது சிங்களம்

ஆ...... எத்தனை எத்தனை
சின்னஞ்சிறுசுகள் எம் அன்னை மண்ணில்
கர்ப்பைக் களவாடும் காமுகர்களின்
கைகளில் சிக்கி சின்னாபின்னமாகும்
அவல நிலையோடு எத்தனை நாட்கள்தான்
எம்மின சகோதரிகள்
பொறுத்தது போதும் எழுந்திடுவோம் பூகம்பமாய்

அரசே எம் இனத்திற்கொரு நீதி கிடையாதோ
என்னை மாற்றிய ஈழம்
உன்னை மாற்றாதோ?
சீறிய சிறுத்தையாய் எம்மக்கள்
நீதி கேட்பது உன் செவிகளில் விழவில்லையோ?
உன் இன மக்கள் என எம்மையும் ஒருகணம் எண்ணிப்பார்.


நான் என்றும் உங்கள்
புலம்பேர் ஈழத்தமிழ் மகள்
என். ஜனா (சோலை)

எழுதியவர் : என்.ஜனா (29-Mar-13, 5:21 pm)
சேர்த்தது : என்.ஜனா
பார்வை : 113

மேலே