பள்ளி நட்பு!

வானமே எங்களின்
வசந்தம் ஆயிற்று!

வானவில்லே எங்களின்
வகுப்பறை ஆயிற்று!

ஆம் ஐந்து வயதில்
காதை தொட்டு
ஒன்றாம் வகுப்பில்
சேர்த்துவிட்டு சென்றனர்
என் பெற்றோர்!
அது அவர்களின்
கடமை ஆயிற்று!

பக்கத்தில் அமர்ந்து இருந்த
என் வயது தோழி
அவளின் கண்களிலும்
நீர்த்துளி!
புதிதாக அரும்பிய நட்பு!
வானம் போல்
வசந்தம் ஆயிற்று
எங்கள் நட்பு!

ஆறாம் வகுப்பில்
அடியெடுத்து
வைக்கும் போது
வேறுவேறு பள்ளிக்கு
சென்றுவிட்டது
எங்களின் நட்பு!

ஆறாம் வகுப்பில்
புதிய நட்பு தொடங்கியது!

முதல் வகுப்பு நட்பும்
ஆறாம் வகுப்பு நட்பும்
என்றென்றும் அழியாத
எங்களின் தோழமை
தள்ளாடும் வயதிலும்...

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (31-Mar-13, 4:49 pm)
பார்வை : 1058

மேலே