அவள் ஒரு கவிதை

ஜன்னலைத் திறந்தேன்
கதிரவனின் காலைக் கடிதம்
கையில் வந்து விழுந்தது.
தோட்டத்து மலர்கள்
கையசைத்து வரவேற்றது
கையில் தேநீர் கோப்பை
காற்றில் மிதக்கும் கூந்தல்
கதவைத் திறந்து
அறையில் அவள் நுழைந்தாள்
ஒரு கவிதையாக .

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (3-Apr-13, 10:03 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : aval oru kavithai
பார்வை : 85

மேலே